போன ஞாயிற்றுக்கிழமை banning State park சென்று இருந்தோம். புகைப்படங்கள் பகிர்ந்து இருந்தேன். அதை பற்றி சில விவரங்கள் . இங்கு இலையுதிர் காலம் மிக அழகு. நாங்கள் இருக்கும் இடத்தை விட இன்னும் சற்று வடக்கே நதிக்கரை ஓரமாக மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் காட்சிகள் மிக அழகு (fall colours) என்று கேள்விபட்டு அங்கு சென்றோம். தனியாக அல்ல 18 பேர் கொண்ட குழுவாக இங்கே எந்த பயணம் ஆனாலும் வானிலை அறிக்கை பார்த்து மட்டுமே முடிவெடுக்கிறார்கள். அந்த அளவுக்கு ‘சட்டென்று மாறும் வானிலை’ தான். ஆனால் ஒரு நாளும் அது பொய்ப்பதில்லை. பெய்யென பெய்யும் மழை தான். 5 மணிக்கு மழை என்றால் மழை பெய்தே தீரும். அதனால் அந்த வாரக்கடைசி clear and Sunny என்று போட்டிருந்ததால் துணிந்து கிளம்பினோம்.. மக்கள் வருகை அதிகம் இருந்தும் அந்த இடத்தில் சற்றும் இயற்கை பாதிக்க படாமல் இருந்தது. கடைகள் இல்லை.. தண்ணீர் பாட்டில் இல்லை.. சிறு ஒற்றையடி பாதை மட்டுமே.. கரை புரண்டு ஓடிய ஆற்றின் அழகு மட்டுமே. செல்லும் முன் உணவு ,தண்ணீர், சிறு தீனி என முன்பே எடுத்துக்கொள்வது ஏன் என்று புரிந்தது. வனப்பகுதியில் தொடக்கத்தில் நம்மிடம் ஒரு வரைபடம் தருகிறார...
என் புதிய அமெரிக்கா வாசம் பற்றிநேற்று நான் பதிவிட்ட இழை யை தொடர்ந்து அதில் விட்டு போன சில விவரங்கள் இதோ.. தண்ணீர்: இங்கு தண்ணீர் தட்டுப்பாடு அறவே இல்லை. நான் வசிக்கும் மாநிலம் ஏரிகளால் ஆனது. நிலத்தடி நீர்வளம் நிறைந்த பகுதி. ஆனால் அரசு மக்களை நீர் சேமிப்பு நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த பல முயற்சிகள் எடுக்கிறது. குழாய் நீர் குடிக்கும் அளவுக்கு மிக தரமானதாக இருக்கிறது. இருந்தாலும் மொத்த விலைகடையில் மினரல் வாட்டர் பாட்டில்களை (30-40 பாட்டில் ஒரு பாக்கட்) வாங்கி செல்கிறார்கள். அவை நிறம் சுவை சேர்த்தும் கிடைக்கிறது. விலை 3$ . கடைகள் : இங்கு கடைகளில் ஒரு ஆச்சரியமான விஷயம் கண்டேன். நாம் ஒரு பொருள் வாங்கி பயன்படுத்தி ஒருவேளை நமக்கு அது பிடிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் ரசீதொடு திருப்பி தந்துவிட்டால் முழு பணம் திருப்பி தரப்படும். இது பொதுவில் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க படுகிறது. உடைகள் உட்பட. சரி எல்லாமே விலை அதிகம் தானா மலிவு விலை பொருட்களே கிடைக்காதா என்றால் கிடைக்கிறது.டாலர் டிரீ எனப்படும் ஒரு டாலர் கடைகளில். நம் ஊர் எது எடு 10 ரூபாய் பொல் இங்கே எது எடுத்தாலும் 1 டால...
Comments
Post a Comment