Posts

Banning State park விவரங்கள்

Image
  போன ஞாயிற்றுக்கிழமை banning State park சென்று இருந்தோம். புகைப்படங்கள் பகிர்ந்து இருந்தேன். அதை பற்றி சில விவரங்கள் . இங்கு இலையுதிர் காலம் மிக அழகு. நாங்கள் இருக்கும் இடத்தை விட இன்னும் சற்று வடக்கே நதிக்கரை ஓரமாக மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் காட்சிகள் மிக அழகு (fall colours) என்று கேள்விபட்டு அங்கு சென்றோம். தனியாக அல்ல 18 பேர் கொண்ட குழுவாக இங்கே எந்த பயணம் ஆனாலும் வானிலை அறிக்கை பார்த்து மட்டுமே முடிவெடுக்கிறார்கள். அந்த அளவுக்கு ‘சட்டென்று மாறும் வானிலை’ தான். ஆனால் ஒரு நாளும் அது பொய்ப்பதில்லை. பெய்யென பெய்யும் மழை தான். 5 மணிக்கு மழை என்றால் மழை பெய்தே தீரும். அதனால் அந்த வாரக்கடைசி clear and Sunny என்று போட்டிருந்ததால் துணிந்து கிளம்பினோம்.. மக்கள் வருகை அதிகம் இருந்தும் அந்த இடத்தில் சற்றும் இயற்கை பாதிக்க படாமல் இருந்தது. கடைகள் இல்லை.. தண்ணீர் பாட்டில் இல்லை.. சிறு ஒற்றையடி பாதை மட்டுமே.. கரை புரண்டு ஓடிய ஆற்றின் அழகு மட்டுமே. செல்லும் முன் உணவு ,தண்ணீர், சிறு தீனி என முன்பே எடுத்துக்கொள்வது ஏன் என்று புரிந்தது. வனப்பகுதியில் தொடக்கத்தில் நம்மிடம் ஒரு வரைபடம் தருகிறார்கள்

Banning State park

Image
  நேற்று சென் இடம் banning State park அங்கு இலையுதிர் கால நிறங்கள் மிகவும் பிரபலம். சில தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் (நான் எடுக்கவில்லை) உங்களுக்காக

அமெரிக்க நடைமுறைகள்(2)

Image
  என் புதிய அமெரிக்கா வாசம் பற்றிநேற்று நான் பதிவிட்ட இழை யை தொடர்ந்து அதில் விட்டு போன சில விவரங்கள் இதோ.. தண்ணீர்: இங்கு தண்ணீர் தட்டுப்பாடு அறவே இல்லை. நான் வசிக்கும் மாநிலம் ஏரிகளால் ஆனது. நிலத்தடி நீர்வளம் நிறைந்த பகுதி. ஆனால் அரசு மக்களை நீர் சேமிப்பு நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த பல முயற்சிகள் எடுக்கிறது. குழாய் நீர் குடிக்கும் அளவுக்கு மிக தரமானதாக இருக்கிறது. இருந்தாலும் மொத்த விலைகடையில் மினரல் வாட்டர் பாட்டில்களை (30-40 பாட்டில் ஒரு பாக்கட்) வாங்கி செல்கிறார்கள். அவை நிறம் சுவை சேர்த்தும் கிடைக்கிறது. விலை 3$ . கடைகள் : இங்கு கடைகளில் ஒரு ஆச்சரியமான விஷயம் கண்டேன். நாம் ஒரு பொருள் வாங்கி பயன்படுத்தி ஒருவேளை நமக்கு அது பிடிக்கவில்லை என்றால் 30 நாட்களுக்குள் ரசீதொடு திருப்பி தந்துவிட்டால் முழு பணம் திருப்பி தரப்படும். இது பொதுவில் அனைத்து இடங்களிலும் கடைபிடிக்க படுகிறது. உடைகள் உட்பட. சரி எல்லாமே விலை அதிகம் தானா மலிவு விலை பொருட்களே கிடைக்காதா என்றால் கிடைக்கிறது.டாலர் டிரீ எனப்படும் ஒரு டாலர் கடைகளில். நம் ஊர் எது எடு 10 ரூபாய் பொல் இங்கே எது எடுத்தாலும் 1 டாலர் த

அமெரிக்க நடைமுறைகள்(3)

Image
  கடந்த திரியில் இந்த ஊர் கடைகள், கல்வி பற்றி சொன்னேன். இப்போது இங்கிருக்கும் நிலப்பரப்பு வானிலை, சாலைகள் பற்றி சொல்கிறேன். நிலம் பற்றி அறிய விக்கிப்பீடியா இருக்கிறது.. அதனால் நிலம் பற்றி என் கருத்தை தான் இங்கே பதிகிறேன். இங்கு வந்து நான் பார்த்தது வர்ஜீனியா, மின்னசோட்டா அப்புறம் அமெரிக்கா தலைநகரமான வாஷிங்டன் டி சி இதில் வாஷிங்டன் நாம் திரைப்படங்களில் பார்க்கும் அமெரிக்க நகரம் போலவே (சற்றே பழைய) இருக்கிறது. Skyline எனப்படும் பெரும் கட்டிடங்கள் சூழ்ந்த நகரமாக இருக்கிறது. கண்ணுக்கு மிக அழகு.. ஆனால் இந்த பெரு நகரங்கள், மின்னசோட்டா தலைநகரமான மினியோபொலிஸ் உட்பட இவை தவிர பிற இடங்கள் பெரும்பாலும் அடர் மரங்கள் வனாந்திரம் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் , நியூயார்க் என மாகாணங்களின் தலைநகரங்கள் ஜொலிக்கும் அளவுக்கு பிற இடங்கள் இல்லை. முதன்முதலில் இது எனக்கு முதலில் வந்த சில நாட்களில் இது எனக்கு ஏமாற்றமாக தான் இருந்தது. வந்த சில நாட்களிலேயே என் கணவரின் தங்கை வீட்டிற்கு (வர்ஜீனியா ) நேர்ந்தது. தனியாக சென்ற அந்த பயணத்தில் தான் திரையில் கண்ட அமெரிக்காவை காண முடிந்தது. வர்ஜீனியா மின்னசோட்ட

சில கருத்துகள்

Image
  நண்பர்களுக்கு வணக்கம். இது வரை வெளிநாட்டில் வாழ துவங்கிய என் அனுபவங்கள் பற்றிய இழைகள் போட்டு வந்தேன். ஹாலோவீன் சென்ற பிறகு அடுத்து கிருத்துமஸ் வரை பெரிதாக நிகழ்வுகள் இல்லை ஆதலால் இந்த இழை பொதுவானது. இந்த வாரம் மின்னசோட்டா நடப்புகள் அல்ல. வேறு சில கருத்துகள். முழுக்க என்னுடைய சொந்த அனுபவங்கள் வைத்து என் புரிதலை உங்களோடு பகிர்கிறேன். குழந்தைகள்.. ஒவ்வொருவரும் நம் பிள்ளைகளை ஒவ்வொரு விதமாக வளர்க்கிறோம். இது சரி இது தவறு என நாம் பார்த்தவைகள் , நமை வளர்த்த விதம் கொண்டு இது மாறுபடும். தான் வளர்ந்த முறை பற்றி, தன் பெற்றோர் பற்றி பெருமதிப்பு வைத்திருப்போர் தான் வளர்ந்த விதத்திலேயே தன் குழந்தைகளை வளர்க்க நினைப்பதும். சிறு வயதில் துன்புற்று வளர்ந்தவர்கள் அதற்கு நேர் மாறாக தன் பிள்ளைகளை வளர்ப்பதும் பொதுவான உளவியல். அவர்கள் வளர்ப்பில் இத்தனை யோசிக்கும் நாம் முக்கியமான ஒன்றை யோசிக்க மறுக்கிறோம் . 80’s 90’s கிட்ஸ் என்று பெருமைப்படும் நாம் நம் குழந்தைகளுக்கு அத்தகைய சூழல் தருகிறோமா? என்றேனும் பிள்ளைகளை அவர்கள் போக்கில் இருக்க விடுகிறோமா? நமக்கு வாய்த்த இயல்பான குழந்தை பருவம் அவர்களுக்கு வாய்க்க விடு

அமெரிக்க நடைமுறைகள் (1)

Image
  அன்பு நண்பர்களே, இன்றைய திரியின் விவரங்கள் உபயம் (மொத்தமாக இல்லை, ஒரு 75%) திரு ராம்குமார் அவர்கள் (என் கணவர்) அமெரிக்க சாலைகள் அமெரிக்க சாலைகள் பற்றி சொல்லும் முன் நான் பழகியது பார்த்தது சிறிதளவே என்றாலும் எனைக்கவர்ந்த / வியக்கவைத்த இந்த ஊர் நடைமுறைகள் சிலவற்றை சொல்கிறேன்.. இங்கு வந்தது முதல் நான் வியந்து பார்த்தது இந்த நாட்டின் தேசியக் கொடியை.. இதிலென்ன ஆச்சர்யம்? அமெரிக்க கொடி தான் நமக்கு நன்றாக தெரியுமே, புதிதாக அதில் என்ன என்றால், எங்கு திரும்பினாலும், எந்த கட்டிடமானாலும், பல நேரங்களில் வீடுகளில் கூட கம்பீரமாக பறக்கிறது (2) திரும்பும் திசைகளில் எல்லாம் , வங்கிகள், கடைகள், மருத்துவமனைகள் , மருந்துக் கடை என அனைத்து இடங்களிலும் சின்னதாக எல்லாம் இல்லை.. நன்கு பெரிதாக கீழே விளக்குகள் எல்லாம் வைத்து இரவில் கூட அழகுற ஒளிரும் படி கம்பங்களில் கொடி பறக்கிறது.. இதோ இப்படி.. நாம் எங்கிருக்கிறோம் என்று நமக்கு நினைவு படுத்திக்கொண்டே இருப்பது போல் இந்தக் கொடிகள் பறக்கின்றன. தேசப்பற்று என்றால் எதிரி நாட்டோடு போரிடுவது, உள்நாட்டு அரசு சரி இல்லையென்றால் அதற்கு எதிராக குரல் கொடுப்பது, நாட்டு வளர்ச

அமெரிக்கா புதிது

Image
  சமீபத்தில் நான் அயல்நாட்டு வாசியாக ஆனேன்.பொதுவில் அமெரிக்கா பற்றி நம் ஊரில் நாம் வைத்திருக்கும் சாமானிய கருத்துகளோடு இங்கு வந்தேன்.. இங்கு வந்த பிறகு நான் கவனித்த எனை வியக்க வெறுக்க வைத்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளவே இந்த திரி.. அயல் நாடு எனக்கு புதிது அமெரிக்கா புதிது..(1)  நான் பல ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து சென்று வேலை பார்த்த அனுபவம் இருந்ததால் பெரிதாக இதற்கும் அதற்கும் வித்தியாசம் இருக்காது என்று நினைத்திருந்தேன்.. நிஜம் வேறு.முதலில் இங்கிலாந்து பல வகைகளில் நம் நாட்டை நினைவு படுத்தும். சாலைகள், இடப்புறம் நோக்கிய போக்கு வரத்து. (2)  மக்கள் கூட்டம் , மெட்ரோ டிரெயின், பப்ளிக் பஸ் வசதிகள், கடைகள், நுகர்வோர் பொருட்கள், மெட்ரிக் சிஸ்டம் எனப்படும் கிலோ, கிராம் , சென்டிமீட்டர் எல்லாம் இங்கிலாந்துக்கும் இந்தியாவிற்கும் நிறைய ஒற்றுமைகள்.. அமெரிக்காவில் இது அனைத்தும் பிடிவாதமாக நேர்மார்.. (3)  நம் ஊரில் மின் விசை கீழ் அழுத்தினால் on என்று அர்த்தம் அல்லவா இங்கே மேல் நோக்கினால் on. இங்கு சாலைகள் வலப்புற போக்குவரத்து கொண்டவை என்று தெரியும் ஆனால் அதற்கு பழகுவது இவ்வளவு சிரமம் என்று தெரியாது.