அமெரிக்க நடைமுறைகள்(3)

 கடந்த திரியில் இந்த ஊர் கடைகள், கல்வி பற்றி சொன்னேன். இப்போது இங்கிருக்கும் நிலப்பரப்பு வானிலை, சாலைகள் பற்றி சொல்கிறேன். நிலம் பற்றி அறிய விக்கிப்பீடியா இருக்கிறது.. அதனால் நிலம் பற்றி என் கருத்தை தான் இங்கே பதிகிறேன்.

இங்கு வந்து நான் பார்த்தது வர்ஜீனியா, மின்னசோட்டா அப்புறம் அமெரிக்கா தலைநகரமான வாஷிங்டன் டி சி இதில் வாஷிங்டன் நாம் திரைப்படங்களில் பார்க்கும் அமெரிக்க நகரம் போலவே (சற்றே பழைய) இருக்கிறது. Skyline எனப்படும் பெரும் கட்டிடங்கள் சூழ்ந்த நகரமாக இருக்கிறது. கண்ணுக்கு மிக அழகு..

ஆனால் இந்த பெரு நகரங்கள், மின்னசோட்டா தலைநகரமான மினியோபொலிஸ் உட்பட இவை தவிர பிற இடங்கள் பெரும்பாலும் அடர் மரங்கள் வனாந்திரம் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் , நியூயார்க் என மாகாணங்களின் தலைநகரங்கள் ஜொலிக்கும் அளவுக்கு பிற இடங்கள் இல்லை. முதன்முதலில் இது எனக்கு முதலில் வந்த சில நாட்களில் இது எனக்கு ஏமாற்றமாக தான் இருந்தது.

வந்த சில நாட்களிலேயே என் கணவரின் தங்கை வீட்டிற்கு (வர்ஜீனியா ) நேர்ந்தது. தனியாக சென்ற அந்த பயணத்தில் தான் திரையில் கண்ட அமெரிக்காவை காண முடிந்தது.

வர்ஜீனியா மின்னசோட்டா வை விட மரங்கள் அடர்ந்து இருந்தது சாலைகள் போட்டாலும் வீடுகள் கட்டினாலும் தேவையான இடம்தவிர இடையில் இருக்கும் மரங்களை வெட்டுவது இல்லை. பெரும்பாலும் வீடுகள் மரங்களின் மறைவில் சாலையிலிருந்து சற்று ஒதுங்கி டிரைவ் வே எனப்படும் சிறு பாதைகளோடு இருக்கின்றன.

அவற்றின் தொடக்கத்தில் சிறு கம்பங்களில் தபால் பெட்டிகள் வைத்து வீடுகளின் முன் புறம் கண்டிப்பாக சற்று இடம் விட்டு புற்கள், சிறு மரங்கள் கார் செல்லும் வழி என ரசனையோடு அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் வேலி அல்லது சுற்று சுவர் வைப்பதில்லை. சப் அர்பன் எனப்படும் புற நகர் பகுதியில் வீடுகளுக்கு இடையே ஆனா இடைவெளி மிக அதிகம் வயல் வெளிகள் நிறைய காணப்படுகின்றன. நான் இதுவரை நிறைய சோள வயல்களும், நிலக்கடலை வயல்களும் பார்த்தேன்.. இது தவிர மாட்டு பண்ணைகள் காய்கறி தோட்டங்கள் என பலவும் பெரிய அளவில் காண நேர்ந்தது.

அவை கிராமங்கள் என தனித்து இல்லாமல் அனைத்து நகர்புற வசதிகளோடு இருப்பது தான் சிறப்பு மரங்கள் நம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் மரங்களை போல பெரிதாக இருக்கின்றன. என்ன பெயர் தெரிய வில்லை. கிளைகளை அவ்வப்போது வெட்டி சீராக அந்தந்த நகராட்சிகள்,சொசெய்டி அமைப்புகள் கவனித்து கொள்கின்றன. புற்கள் அவரவர் பகுதிகளில் இயந்திர உதவியோடு வெட்டி கொள்கிறார்கள்.

சரி, வானிலை பற்றி சொல்கிறேன்.. வானிலை என்றால் குளிர், வெயில், மழை, பனிப்பொழிவு இதெல்லாம் தானே.. ஆனால் நாம் அறியாத ஒன்று.. வெளிச்சம்.. பொதுவா கூலிங் கிளாஸ் போட்டால் எதோ அமெரிக்கா ரிட்டன் போல கண்ணாடி போட்டிருக்கான் என்று சொல்வோம் இல்லையா.

அப்போதெல்லாம் இது ஸ்டைலுக்கு என்று ஸ்டைலுக்கு என்றுதான் நான் நினைத்து இருந்தேன். இங்கு அது அவசிய தேவை என்று அறிந்து கொண்டேன். கொஞ்சம் கூட வெப்பம் இல்லாமல் மிக அதிக வெளிச்ச கதிர்கள் விழுகின்றன.

புவியின் வடக்கில் கடக ரேகை எனப்படும் tropic of Cancer (சரியாக நம் இந்தியாவை இந்த ரேகை இரண்டாக பிரிக்கிறது) ஐ தாண்டி வடக்கே தொலைவில் இருக்கிறது அமெரிக்கா. இதில் மெக்சிகோ வை ஒட்டிய தெற்கு பகுதி நம் இந்திய வானிலை போன்றே இருக்க கூடும். ஆனால் பிற இடங்களில் சூரியக்கதிர்கள் சாய்வாகவே விழுகின்றன. மாலை நேர மஞ்சள் வெயில் மிக அதிக மஞ்சளாக சாலையில் அழகாக விழுகிறது. அந்த அழகில் ஆபத்தும் இருக்கிறது.

இந்த அதிக வெளிச்சம் கண்களை மிகவும் கூச வைக்கும். குறிப்பாக காரோட்டிகளுக்கு. இங்கே கண்ணாடியை கூலர்ஸ் என்று அழைப்பதில்லை.ஷேட்ஸ் (நிழல்) என்றே சொல்கிறார்கள். நிலவு என்னவோ நம் ஊரில் பார்த்த அதே நிலவு தான் ஆனால் வானில் இடம் மாறி இருப்பது போல் தெரிகிறது (பிரமையாகவும் இருக்கலாம்) .

பொதுவாக சென்னை வானிலை பற்றி யாரேனும் என்னிடம் கேட்டால் வெயில், வெப்பம், அனல் என்று விளையாட்டாக சொல்வேன்.. இங்கே மின்னசோட்டா வில் அதையே மாற்றி குளிர், கடும் குளிர், உறையும் குளிர் என்று சொல்கிறார்கள். நான் இங்கு வந்த போது வேனில் காலம்.. நம் நாட்டில் ஊட்டி பொல் இருந்தது.

இப்போது இலையுதிர் காலம். இன்றைக்கு 6 டிகிரி வரை இருந்தது.. இரவில் வெளியே சென்றால் முகத்தில் காற்று ஊசி குத்துவது போல் அறைகிறது. பக்கத்து கடைக்கு கூட காரில் தான் செல்ல வேண்டும். இந்த ஊர் மக்கள் மெலிதான உடைகளோடு கடைகளில் எப்போதும் போல் ஹாய் ஹலோ என்று சகஜமாக இருக்கிறார்கள் .

பழகி விட்டது போல. நமக்கு தான் புதிது.. இன்று இதோடு நிறுத்தி கொள்கிறேன் நாளை வேறு எது பற்றி எழுதட்டும் என்று கமென்ட் செய்யவும் 🙂 (end)

சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு. எதுவும் பிளான் செய்து எடுக்காத candid shots

Comments

Popular posts from this blog

Banning State park விவரங்கள்

அமெரிக்க நடைமுறைகள்(2)