என் அமெரிக்கா தீபாவளி

 வணக்கம் நண்பர்களே.. எல்லோர்க்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்.. முதல் முறை சுற்றங்கள் சூழாத தீபாவளியை எதிர்நோக்கி இருக்கிறேன். இதுவும் ஒரு புது அனுபவம் என்று சற்று ஆர்வமாக தான் இருக்கிறேன். இங்கிருக்கும் நம் மக்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பார்க்கும் ஆவல் (1)

இங்கு நான் இருக்கும் பகுதி பெரும்பாலும் இந்தியர்கள் நிறைந்த பகுதி என்று முன்பே சொல்லி இருக்கிறேன். இன்றைய திரி இங்குள்ள தீபாவளி ஆயத்தங்கள் பற்றியது.. இரண்டு வாரங்களுக்கு முன்பே தள்ளுபடி விற்பனை தொடங்கியது. நம்மூர் போல் உடைகள் தள்ளுபடி அல்ல.. மளிகை தள்ளுபடி. இங்கே விலைவாசி (2)

நம்மூர் பொருட்களுக்கு அதிகமென்பதால் மளிகை கடைகள் பண்டிகை கால தள்ளுபடி போட்டி போட்டு தருகின்றன. கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்களுக்கு மளிகை வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்கிறார்கள் நம்மவர்கள். கேட்டால் அடுத்து ரம்ஜான் தள்ளுபடி வரை தாங்கும் என்று. இருகடைகளின் வாடிக்கையாளர் களுக்கும் (3)

வாட்ஸ்அப் மூலம் அறிவிப்புகள் செய்து அவை பகிரப்பட்டு கூட்டம் அள்ளுகிறது. நம்மூர் ஹல்திராம், ஆச்சி, எவரஸ்ட் , அணில் சேமியா எல்லாம் ஒரே நேரத்தில் அதிக அளவில் கிடைக்கின்றன. இங்கு ஒன்று கவனித்தேன்.இங்குள்ள பண்டிகைகள் இன்னும் தொண்ணூறுகளில் நாம் கொண்டாடியவை போலவே கொண்டாடப்படுகின்றன. (4)

இங்கு கடைகளில் பலகாரங்கள் விலை அதிகம் அதனால் வீட்டிலேயே விதம்விதமாக தயார் செய்கின்றனர். பெண்கள் பெரிய அளவில் சமைப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.ஏதேனும் விசேஷம் என்றால் கேட்டரிங் எல்லாம் இல்லை.நான்கைந்து வீட்டு பெண்கள் வேலையை பகிர்ந்துகொண்டு எளிதாக 50 பேர்க்கு சமைக்கிறார்கள்(5)

எனக்கென்னவோ சிறு வயதில் தீபாவளி என்றால் ஒரு வாரம் முன்னதாக என் தாயார் செய்யும் பலகார ஆயத்தங்கள் அனைத்தும் நினைவுக்கு வருகிறது.. காரிடார் முழுதும் வெல்லப்பாகு வாசனையும் முறுக்கு வாசனையும் தூக்குகிறது.. இதில் அம்மா வீட்டு பலகாரங்கள் வைத்து ஓபி அடித்த என்பாடு திண்டாட்டம் தான் 🙂 (6)

இப்போது தான் யூடியூப் உபயத்தில் சுலபமான சிலவற்றை முயற்சித்து கொண்டிருக்கிறேன். உடைகளை பொறுத்தவரை எல்லோருமே (நான் உள்பட) பண்டிகைகள் பிறந்த நாள் என கணக்கு வைத்து முன்கூட்டியே இந்தியாவிலிருந்து வாங்கி வந்து விடுகிறார்கள்.. விற்கவும் செய்கிறார்கள்.. தீபங்கள், பட்டாசுகள் என களை (7)

கட்டிக்கொண்டு இருக்கிறது. பட்டாசுகள் வெடிக்க தனி வீடுகளுக்கு அனுமதி உண்டு. எங்கள் போல் குடியிருப்புகளில் இருப்பவர்கள் இங்கிருக்கும் கோவிலுக்கு சென்று கொளுத்தலாம். வெடிகள் அனுமதி இல்லை. மத்தாப்பு, புஸ்வாணம் போன்றவை உண்டு.புஸ்வாணம் ஆறடிக்கு மேல் எழும்பக்கூடாது. வால்மார்ட்டிலேயே (8)

கிடைக்கிறது. சிறு வாய்ப்பு கிடைத்தாலும் நம் நாட்டின் கொண்டாட்டங்களை இங்கு முழுதாக அனுபவித்து விடும் வேகமும் ஆர்வமும் நம்மூரை விட அதிகமாகவே காணப்படுகிறது. நாட்டை பிரிந்து இருக்கும் போது நம் பண்பாட்டின் அருமை முழுதாக தெரிகிறது. செலவுக்கும் சலிப்பதில்லை வேலைக்கும் சலிப்பதில்லை. (9)

இதில் எங்கள் குடியிருப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் அமெரிக்கர்கள் வியந்து வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுக்கும் ஹாலோவீன் வருகிறது. அது பேய்கள் பண்டிகை என்பதால் வீட்டை பேய் வீடு போல் அலங்கரித்து.. வாசலில் சிலந்தி வலை எலும்புக்கூடு என்று அது வேறு தனி கூத்து தான் (10)

இதெல்லாம் ஒரு பக்கமிருக்க குளிர் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று ஜீரோ டிகிரி. மோஸ்ட்லி சன்னி என்று வெயில் பற்றி அறிவிப்பு வேறு 🙂

கையுறை காலுறை ஷூ ஜாக்கெட் இன்றி வெளியில் சென்றால் உயிருக்கு (குறைந்த பட்சம் விரல்களுக்கு) உத்திரவாதம் இல்லை. வீடு நினைவு வெகுவாக வாட்டினாலும். நம்ம வீட்ல என்னமா செய்யப்போற என்று கேட்கும் குழந்தைகளுக்காக (12)

சிறுவயதில் என்ன கஷ்டம் இருந்தாலும் என் தீபாவளி ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியாக மட்டுமே நினைக்கும் படி செய்த என் பெற்றோர்களுக்கு நன்றியாக இங்கு எந்தக் குறையுமின்றி இந்த தீபாவளியை கொண்டாட காத்திருக்கிறேன். (13) end

🙏

Comments

Popular posts from this blog

Banning State park விவரங்கள்

அமெரிக்க நடைமுறைகள்(2)

அமெரிக்க நடைமுறைகள்(3)